Sunday 3 January 2010

அழகி தட்டச்சு மென்பொருள்

நண்பர்களின் யோசனையை ஏற்று, நான் பயன்படுத்திய அல்லது கேள்விபட்ட மென்பொருள்களை பற்றிய செய்திகளை நான் எழுத முடிவு செய்துள்ளேன். அப்படி நான் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் தான் அழகி. இந்த மென்பொருள் தமிழில் மிக சுலபமாகவும் , வேகமாகவும் தட்டச்சு செய்ய உதவுகிறது. மைக்ரோசாப்ட் வோர்ட் மற்றும் எக்ஸ்செல் மென்பொருள்களில் இந்த தட்டச்சு மென்பொருளை பயன்படுத்துவது மிக சுலபம், மேலும் விவரங்கள் இந்த வலைமனையில் உள்ளது.
இந்த மென்பொருளின் அணைத்து அம்சங்களும் இந்த வலைமனையில் உள்ளது.
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களால் உபயோகபடுதபடுகிறது. இந்த அற்புதமான மென்பொருளை உருவாக்கிய சாய்ராம் விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி.

Monday 28 December 2009

மண் இல்லா விவசாயம்
















உலகம் அதிவேகமாக முன்னேறிவரும இந்த கால கட்டத்தில் , நம் உணவு தேவையும் அதிகரித்து வருகிறது, இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு சுமார் , ஆயிரத்து முந்நூறு கலோரிகள் நம் ஒவொருவருக்கும் குறைந்த பட்சம் தேவைப்படும் என கனகிடப்படுள்ளது , இதற்கு இன்றைய விளைநிலங்களை விட இரண்டு கோடி ஏகர் அதிகம் தேவை படுகிறது.
இந்த தேவையை சமாளிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதில் ஒன்று மண் இல்லா விவசாயம். இந்த விவசாயத்தில் உள்ள வலி முறைதான் ஹைட்ரோபோனிக்ஸ் (hydroponics)மற்றும் ஏறோபோநிக்ஸ்(aeroponics). ஹைட்ரோபோநிக்ஸ் என்றல் மண் இல்லாமல் நீர் மற்றுஒரு செடி வளர்வதற்கு தேவைப்படும் தாதுக்களையும் , வைத்து மண் இல்லாமல் வளர்ப்பது. aeroponics என்றால் செடி வளர்வதற்கான ஈரப்பததை உண்டாகுவது இதற்கு உயரமான கடிதங்கள் தேவை. ஹைட்ரோபோநிக்ஸ் , aeroponics மற்றும் சொட்டுநீர் வழிமுறைகளை பயன் படுத்தி உயரமான கட்டங்களின் உதவியுடன் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒர்லண்டோவில் உள்ள ஒரு ஆய்வகதில் உருவாகியுள்ளனர். இந்த வழிமுறையால் நோய் இல்லாத காய்கறிகளை உருவாக்க முடியும் என்கின்றனர்,
மேலே உள்ள படத்தில் இருப்பது ஒரே தாக்காளி செடிதான். இதன் மூலம் நீர் செலவும் குறைவுதான். இவை உயரமான் கட்டிடங்களில் வளர்வதால் நோய் பரவுவதை தடுக்கலாம், நீரை மறு உபயோகபடுத்தலாம் . எப்படியோ மக்கள் பசியை இந்த தொழில் நுட்பம் குறைத்தால் சரி .மேலும் படிக்கச்.

Sunday 25 October 2009

தனி நாடு

சமீப காலமாக பத்திரிக்கை மற்றும் ஊடகத செய்திகளை படித்தால் , தமிழ் ஈழ முகாம்களின் மோசமான நிலை , கவலையை அளிக்கிறது . முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் விடுதலை அடைந்தாலும் , தங்கள் இயல்பு நிலைக்கு வர பல காலம் ஆகலாம் என்று கூறப்படுவது மேலும் வேதனையளிககூடியதாக உள்ளது. எப்படியும் அடிப்படையில் இருந்து , அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் . இப்படி இருக்க உலகத்தில் உள்ள தமிழர் அனைவரும் ஒன்று கூடி உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள ஒரு சிறு தீவை வாங்கி கொடுக்க வாய்ப்பு உள்ளதா? எப்படியும் அனைத்து கட்டுமானங்களும் அழிந்துவிட்டது , நாம் ஏன் நம் உழைப்பை நமக்கு என்ற இடத்தில் செலவிட்டு அதை உருவாக்க கூடாது. இன்றைய அமெரிக்காவும் , ஆஸ்திரேலியாவும் , மற்றும் பல நாடுகளும் அப்படித்தானே உருவானது.

Wednesday 19 August 2009

Configuring JDBC Authentication Provider in Spring

Two simple steps to configure JDBC Authentication provider in Spring Security

1. Create a table say named users with column names username (varchar), authority(varchar),enabled (number) , the table shall have other fields also.

2. Add the appropriate entry in the security-configuration details in the xml file as below,

The authorities-by-username-query attribute ,as the name suggests is a sql select statement to select the user name and roles(authorities), Ex we shall add a role named ROLE_SUPERUSER and we can secure our web flow using the configuration in the *-flow.xml.

Common Errors :

* The system gives error if any of the username, password , authority , enabled column is missing in the table
* It gives error if the type of the column - enabled is not number.

Tuesday 19 May 2009

காமெடி கிங் கிங் மேக்கர் ஆன கதை

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் அஇஅதிமுக மற்றும் நிதிஷ் குமார் உடனான கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார் மேதகு காமெடி கிங் கூறினார். இதன் பின்னணி தோல்வி பயமாகவே தோன்றுகிறது. இரண்டு நாட்களுக்குபின் தமிழின துரோகிஉடனான கூட்டணி வெற்றி பெற்றவுடன் கிங் மேக்கர் என்று தனது பரிவாரங்களுடன் தம்பட்டம் அடித்துகொல்கிறார். இது ஒருபுறம் இருக்க நம் பா.சி எப்படி வென்றார் என்பது கூத்தாக இருக்கிறது. இதற்கு மன்னர் ஆட்சி மேல். மன்னர் எதுவும் தம்பட்டம் அடிக்காமல் தன் மகனையே முடிசூடி விடுவார் , ஆனால் இங்கே எதோ சாதனை செய்ததால் மன்னர் ஆகிறார் என்று நம்மை முட்டாள்கள் ஆக்குகிறார்கள். கும்பக் கும்மி அடிக்க எதுவாக கூட்டணி வேறு. உ . பி இல் நம் காமெடி கிங்கின் மூலை தான் என்று கூறுவது பேரரசுவின் கிளைமாக்ஸ் காமெடி போல் இருக்கிறது.

Tuesday 3 March 2009

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்துவிட்டதா ?

சில தினங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாகப்பட்ட செய்தியை கேட்டவுடன், சோகமாக இருந்த போதும் , இச்செயலை செய்த தீவிரவாதிகளை நினைத்தாள் கோபம்தான் வருகிறது. அவர்கள் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதால் எதையும் சாதிக்கப்போவதில்லை.
இச்செய்திகளை கேட்டால் நம் தோழமை நாடான பாகிஸ்தான் இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்றே கருதுகிறேன்.அந்நாடு பெயரளவில் சுதந்திரம் அடைந்தபோதும் சுதந்திரம் அடைந்த அன்றே சில நாடுகளுக்கு அடிமையாகிவிட்டனர் . அவர்களை மேற்கத்திய நாடுகள் ஆதரிப்பது போல் ஆதரித்து ஆயுத கலாச்சாரத்தை வளர்த்தது மட்டுமல்லாமல் , அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு தற்போது ஒரு நிலையான் ஆட்சி இல்லாமல் செய்துவிட்டனர் . அவர்களுடைய ஆயுதங்களை விற்பதர்காகவும், அந்நாட்டை தன் ராணுவ தலமாக பயன்படுத்தவும் அங்குள்ள மக்கள் பலிகடா ஆகிவிட்டனர் .இனியாவது பாகிஸ்தான் அவர்களிடமிருந்து விடுதலை பெற முயற்சிக்க வேண்டும். அவர்களிடமிருந்து விடுதலை பெற்று சீனாவிடம் அடிமை ஆகிவிடக்கூடாது. வளர்ந்த நாடுகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாடுகள் பாகிஸ்தான் மக்களை வைத்து பொருள் ஈட்டிய பின் அவர்களை தீவேரவதிகள் என்று முத்திரை குத்திவிட்டது. நம்மிடம் பொன்னையும் பொருளையும் கொள்ளை அடித்து விட்டு வறுமை மிகுந்த நாடு என்று நகைப்பதை போலே . பாகிஸ்தான் விடுதலை பெற்று , இந்தியாவை எதிரியாக கொண்டாலும் அந்நாடு தனிச்சியாக முடிவு எடுக்க வேண்டும் என்பதே என் அவா .