Sunday, 25 October 2009

தனி நாடு

சமீப காலமாக பத்திரிக்கை மற்றும் ஊடகத செய்திகளை படித்தால் , தமிழ் ஈழ முகாம்களின் மோசமான நிலை , கவலையை அளிக்கிறது . முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் விடுதலை அடைந்தாலும் , தங்கள் இயல்பு நிலைக்கு வர பல காலம் ஆகலாம் என்று கூறப்படுவது மேலும் வேதனையளிககூடியதாக உள்ளது. எப்படியும் அடிப்படையில் இருந்து , அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் . இப்படி இருக்க உலகத்தில் உள்ள தமிழர் அனைவரும் ஒன்று கூடி உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள ஒரு சிறு தீவை வாங்கி கொடுக்க வாய்ப்பு உள்ளதா? எப்படியும் அனைத்து கட்டுமானங்களும் அழிந்துவிட்டது , நாம் ஏன் நம் உழைப்பை நமக்கு என்ற இடத்தில் செலவிட்டு அதை உருவாக்க கூடாது. இன்றைய அமெரிக்காவும் , ஆஸ்திரேலியாவும் , மற்றும் பல நாடுகளும் அப்படித்தானே உருவானது.

1 comment:

  1. எந்த ஒரு மனிதனுக்கும் அவன் பிறந்த வீடு, பிறந்த ஊர் என்றால் அது தனி சிறப்பு உடையதுதான்.
    அவனை அங்கிருந்து அகற்ற என்ன விலை கொடுத்தாலும் அவன் முழுமனதுடன் அதை
    விட்டு செல்ல மாட்டான். அப்படி இருக்க நம் இனத்தை சேர்ந்த மக்கள் மட்டும் எல்லாவற்றையும் இழந்து
    அவர்கள் தாயகத்தை விட்டு இடம்பெயர நாம் அனுமதிக்கலாமா?
    நர்மதை நதியின் குறுக்கே அணை கட்டினால் அங்கு வாழும் பழங்குடியினர் இடம்பெயர நேரிடும்
    என அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாம் இந்த விடயத்தில் தலைகீழாக நடந்துகொள்வது சரியா?எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நம் மக்களின் மீதுள்ள இரக்கம்
    மற்றும் நல்லுணர்வாக இந்த எண்ணம் இருந்தாலும், இந்த நிலைக்கு
    அவர்களைத் தள்ளியதில் தமிழ்நாட்டுத் தமிழர்களாக நம் பங்கு என்ன
    என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். நம் கண்முன்னே
    நடந்த பேரழிவைத் தடுக்காமல் அதற்கு நொண்டிசாக்காக பயங்கரவாதம், சர்வாதிகாரம்,
    சகோதர யுத்தம் என்று கூறி நம்மை விட உணர்வு மழுங்கிய உயிரினம் வேறு எதுவுமே இந்த
    உலகில் இல்லை என நிரூபித்துவிட்டோம். ஒரு பேச்சுக்கு இந்த காரணங்கள் உண்மை என்று
    வைத்துக்கொண்டாலும் இவற்றுக்காக நம் இனத்தை சேர்ந்த மக்களை தடை செய்யப்பட்ட
    ஆயுதங்களால் கொன்றும் உயிருடன் புதைத்தும் கொன்ற அநியாயத்தை தடுக்காமல் அனைத்து புலன்களையும்
    மூடிக்கொண்டு மெளனமாக இருந்தது சரியா? ஒரு பெரும்போரும் பேரழிவும் நடந்ததே தமிழக மக்களுக்கு
    தெரியாமல் பார்த்துகொண்டு தமிழக மற்றும் இந்திய ஊடகங்களை நாம் என்ன செய்ய போகிறோம்?
    இந்த அளவுக்கு நாம் ஏன் மழுங்கிப் போனோம்? இன்னும் என்ன நடந்தால் நாம் விழிப்படைவோம்?
    புரட்சி என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் வேண்டாம். ஒரு அநியாயம் நடந்தால் அதற்கு நாம் குறைந்த அளவு
    எதிர்ப்பாவது காட்டுவோமா என்பது சந்தேகமே!

    ReplyDelete