சில தினங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாகப்பட்ட செய்தியை கேட்டவுடன், சோகமாக இருந்த போதும் , இச்செயலை செய்த தீவிரவாதிகளை நினைத்தாள் கோபம்தான் வருகிறது. அவர்கள் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதால் எதையும் சாதிக்கப்போவதில்லை.
இச்செய்திகளை கேட்டால் நம் தோழமை நாடான பாகிஸ்தான் இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்றே கருதுகிறேன்.அந்நாடு பெயரளவில் சுதந்திரம் அடைந்தபோதும் சுதந்திரம் அடைந்த அன்றே சில நாடுகளுக்கு அடிமையாகிவிட்டனர் . அவர்களை மேற்கத்திய நாடுகள் ஆதரிப்பது போல் ஆதரித்து ஆயுத கலாச்சாரத்தை வளர்த்தது மட்டுமல்லாமல் , அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு தற்போது ஒரு நிலையான் ஆட்சி இல்லாமல் செய்துவிட்டனர் . அவர்களுடைய ஆயுதங்களை விற்பதர்காகவும், அந்நாட்டை தன் ராணுவ தலமாக பயன்படுத்தவும் அங்குள்ள மக்கள் பலிகடா ஆகிவிட்டனர் .இனியாவது பாகிஸ்தான் அவர்களிடமிருந்து விடுதலை பெற முயற்சிக்க வேண்டும். அவர்களிடமிருந்து விடுதலை பெற்று சீனாவிடம் அடிமை ஆகிவிடக்கூடாது. வளர்ந்த நாடுகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாடுகள் பாகிஸ்தான் மக்களை வைத்து பொருள் ஈட்டிய பின் அவர்களை தீவேரவதிகள் என்று முத்திரை குத்திவிட்டது. நம்மிடம் பொன்னையும் பொருளையும் கொள்ளை அடித்து விட்டு வறுமை மிகுந்த நாடு என்று நகைப்பதை போலே . பாகிஸ்தான் விடுதலை பெற்று , இந்தியாவை எதிரியாக கொண்டாலும் அந்நாடு தனிச்சியாக முடிவு எடுக்க வேண்டும் என்பதே என் அவா .
Tuesday, 3 March 2009
Subscribe to:
Posts (Atom)